உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) மேன்மை

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) மேன்மை

உபசரிப்பில் இன்பம் காணும் விருச்சிக ராசி அன்பர்களே!

ராசிநாதனான செவ்வாய் நவ.27 வரை சாதகமாக இருப்பதால் நன்மை சேரும். தெய்வ அனுகூலம் உண்டாகும். எடுத்த முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும்.  குருவின் பார்வை பலத்தால் நற்பலன் காண்பீர்கள்.  பெண்களால் மேன்மை உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மாதத் தொடக்கத்தில் வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். கணவன், மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். பெண்கள் உறுதுணையாக இருப்பர். குறிப்பாக நவ.11,12ல் அவர்களால் முன்னேற்றமான நிகழ்வுகள் நடக்கும். அக்.20,21, நவ.16ல் உறவினர் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் நவ.4,5ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அக்.23 முதல் நவ.13 வரை புதனால் வீட்டில் சில பிரச்னை வரலாம். கணவன், மனைவி  ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.

தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.  உழைப்புக்கேற்ப வருமானம் கிடைக்கும். பணிவிஷயமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். சிலர் பணி, இடமாற்றத்தை சந்திக்க வேண்டியதிருக்கும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. நவ.2,3ல் எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்புண்டு. முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். செவ்வாயால் போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை அக். 27க்குள் கேட்டுப் பெறவும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். சகதொழில் அதிபர்களின் ஆலோசனையை ஏற்று நடப்பது நன்மையளிக்கும். கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். சூரியனால் எதிரிகளின் இடையூறு தலைதூக்க வாய்ப்புண்டு. பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகலாம்.  நவ. 6,7,8,11,12ல் மதிப்பு, மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. அக்.24,25,26ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். செவ்வாயால் அக். 27க்கு பிறகு சிலர் பணஇழப்பை சந்திக்கலாம் கவனம்.

கலைஞர்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாக விடாமுயற்சி தேவைப்படும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைப்பது அரிது. சககலைஞர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம்.
அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு எதிர்பார்த்த பதவி  கிடைக்கும். தொண்டர்களின் மத்தியில் செல்வாக்கு குறையாது. அக். 22,23ல் மனக்குழப்பத்திற்கு ஆளாகலாம்.

மாணவர்கள் புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் மெத்தனமாக இருக்க வேண்டாம்  சிரத்தை எடுத்து படித்தால் மட்டுமே பலன் கிடைக்கும். இருப்பினும் குருவின் பார்வையால் ஆசிரியர்கள், பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் உதவி படிப்புக்கு துணைநிற்கும்.  

விவசாயிகள் சீரான பலனை எதிர்நோக்கலாம். மானாவாரிப் பயிர்களில் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் அக்.27க்குள் பயன்படுத்திக் கொள்ளவும். கால்நடை வளர்ப்பின் மூலம் கிடைக்கும் வருமானம் சேமிப்பாக மாறும்.  வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தில் சிறப்பான நிலை காண்பர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.  குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சுற்றுலா செல்ல வாய்ப்புண்டு. வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். அக்.18,19, நவ.13,14,15ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கும். அக்டோபர் 27,28ல் விருந்து விழா என செல்வீர்கள். சகோதர வழியில் உதவி கிடைக்கும். அக்.23 முதல் நவ. 13 வரை புதனால் அண்டை வீட்டார் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம்.  பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும்.உடல் நலனில்  அக்கறை கொள்வது நல்லது.
செவ்வாயால் அக்.27 க்கு பிறகு வயிறு பிரச்னை வரலாம்.

* நல்ல நாள்: அக்.18,19,24,25,26,27,28,நவ.2,3,4,5,9,10,13,14,15
* கவன நாள்: அக்.29,30 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:5,6
* நிறம்: சிவப்பு, வெள்ளை

* பரிகாரம்:
●  சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள்தீபம்
●  வியாழனன்று  தட்சிணாமூர்த்தி அர்ச்சனை
●  வெள்ளியன்று மகாலட்சுமித்தாயார் வழிபாடு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !