உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாணவர் அலங்காரத்தில் அருள்பாலித்த காஞ்சிபுரம் விநாயகர்

மாணவர் அலங்காரத்தில் அருள்பாலித்த காஞ்சிபுரம் விநாயகர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ராஜகணபதி, பவானி அம்மன், பாலமுருகன் கோவில் நவராத்திரி விழாவில், விநாயகர், சீருடையுடன் பள்ளி செல்லும் மாணவர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.காஞ்சிபுரம், அறிஞர் அண்ணா நெசவாளர் குடியிருப்பில், ராஜகணபதி, பவானி அம்மன், பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில், மூன்றாம் ஆண்டு நவராத்திரி விழா நடந்து வருகிறது.ஒன்பதாம் நாள் உற்சவத்தில், ராஜகணபதி விநாயகருக்கு, பள்ளி செல்லும் மாணவர் அலங்காரம் செய்யப்பட்டது.இதில், விநாயகருக்கு, பள்ளி சீருடை, பெல்ட் அணிவிக்கப்பட்டது. பிளஸ் 1 பாடப்புத்தகம் அடங்கிய ஸ்கூல் பேக்கும், லஞ்ச் பேக்கும் அணிவிக்கப்பட்டது. பாக்கெட்டில் பேனாவுடன், பக்தர்களுக்கு விநாயகர் அருள்பாலித்தார்.பள்ளி மாணவர் அலங்காரத்தில், விநாயகர் காட்சியளித்ததை பார்த்து, பக்தி பரவசத்துடன் பொதுமக்கள் வழிபட்டனர்.





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !