புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் ஆயுத பூஜை
ADDED :2657 days ago
புட்டபர்த்தி: தசரா பண்டிகையின் 8 வது நாளான்று, புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையம், சாய் குல்வந்த் ஹாலில், ஆயுத பூஜை பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பகவான் சத்யசாயின் பாரம்பரியத்தை பின்பற்றி, தங்கரதம் உள்ளிட்ட பல வாகனங்களுக்கு வழிபாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், பிரசாந்தி நிலைய ஊழியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். வேதங்கள் மற்றும் பஜனைகள் இடம்பெற்றன. மங்கள ஆரத்தியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.