உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி தேங்காய்த்திட்டு வடபத்ர சாயிபாபா கோவில் கும்பாபிேஷகம்

புதுச்சேரி தேங்காய்த்திட்டு வடபத்ர சாயிபாபா கோவில் கும்பாபிேஷகம்

புதுச்சேரி: தேங்காய்த்திட்டடில் புதியதாக அமைக்கப்பட்ட வடபத்ர சாயிபாபா கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.புதுச்சேரி, தேங்காய்த்திட்டு சாய்ஜீவசரோஜினி நகரில் வடபத்ர சாயிபாபா கோவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, ஜீரனோத்தாரண அஷ்டபந்தன கும்பாபிேஷகம், பாபாவின் நூறாவது ஜீவசமாதி அடைந்த தினமான நேற்று (அக்., 19ல்) நடந்தது.

அதையொட்டி, காலை 6:00 மணிக்கு பூஜைகள் துவங்கியது. காலை 9:30 மணியளவில், கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு பரதநாட்டியம் மற்றும் சாய்ஷரன் இசைக் கச்சேரி நடந்தது. வட பத்ர சாயிபாபா சேவா பவுண்டேஷன் தலைவர் பஞ்சநாதன் தலைமையில் சிவா, சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.கோவிலில் ஐந்தரை அடி உயர சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதுடன், கோவில் வளாகத்தில் சாயிபாபாவின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும், சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.பாபா அருணாசலம் என்பவர் கொடுத்த பாபாவின் படத்தை வைத்து பல ஆண்டுகளாக பூஜை நடத்தி வந்த நிலையில், பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்ததால், தற்போது கோவில் அமைக்கப்பட்டதாக கோவில் நிர்வாகி பஞ்சநாதன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !