ராஜபாளையத்தில் ஷீரடி சாய்பாபா சமாதி தினம்
ADDED :2548 days ago
ராஜபாளையம்: ராஜபாளையம் அய்யனார் கோயில் ரோட்டில் உள்ள ஷீரடி சாயிபாபா கோயி லில் சாயிபாபாவன் 100 வது சமாதி தின நிகழ்ச்சி நடந்தது.அதிகாலை ஆரத்தியுடன் ஆரம் பித்து, சாயிபாபா மங்களஸ்நானம், சாயி சத்சரித பாராயணம் நடந்தது.
காலை 9:30 மணிக்கு சயன பாபா மூர்த்தியை கோயில் வளாகத்தில் உள்ள ஊஞ்சலில்
பிரதிஷ்டை செய்யப்பட்டது. 108 சங்கினால் மகா ருத்ர அபிஷேகத்தை தொடர்ந்து பெண்களின் சாயி பஜன் மற்றும் கோலாட்டம் நடந்தது. உற்ஸவ மூர்த்தி புஷ்ப சயன அலங்காரத்தில் காட்சியளித்தார்.அன்னதானத்தை தொடர்ந்து 108 திருவிளக்கு பூஜை மற்றும் இரவு ஆரத்தியுடன் நிறைவடைந்தது. ஏற்பாடுகளை ஷீரடி சாய் சேவா சமிதியினர் செய்திருந்தனர்.