புட்டபர்த்தியில் தசரா விழா கோலாகலம்
ADDED :2548 days ago
புட்டபர்த்தி: தசரா பண்டிகையை முன்னிட்டு, புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சொற்பொழி மற்றும் இசைநிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஈஸ்வரம்மா ஆங்கில உயர்நிலை பள்ளி மாணவிகள் வேதம் படித்தனர். தொடர்ந்து, உயர்கல்விக்கான சத்யசாய் நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் சிவ சங்கர சாய், பகவான் சத்யசாயின் கொள்கைகள் குறித்து பேசினார். கலைமாமணி விருது பெற்ற எம்பார் எஸ்.கண்ணனின் வயலின் இசைக்கச்சேரி, கலைஞர் சர்வஸ்ரீ கே.சத்யநாராயணன் வழங்கிய கீபோர்டு , மிருதங்கம் மற்றும் தபேலா இசைக்கலைஞர் கணபதி சுப்ரமணியனின் இசை நிகழ்ச்சி நடந்தது. பஜனைகள் மற்றும் மங்கள ஆரத்தியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.