பரமக்குடியில் வன்னிகாசூரன் வதம்
ADDED :2548 days ago
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள அனைத்து கோயில்களிலும் விஜயதசமி விழாவையொட்டி வன்னிகா சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் தினமும் தாயார் பல்வேறு அவதாரங்களில் அருள்பாலித்தார். நேற்று (அக்., 19ல்) பெருமாள் குதிரை வாகனத்தில் ராஜாங்க கோலத்தில் வன்னிகாசூரனை வதம் செய்ய புறப்பட்டார். வைகை ஆற்று படித்துறையில் வன்னிகாசூரனை வதம் செய்தார். ஈஸ்வரன் கோயிலில் விசாலாட்சி அம்மன் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி, அசுரனை வதம் செய்தார்.