ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரம பதவியேற்பு: 12வது பட்டம் இன்று பதவியேற்பு
ADDED :2598 days ago
திருச்சி: ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின், 12வது பட்டமாக, ஸ்ரீ வராக மஹா தேசிக சுவாமிகள், இன்று பதவியேற்கிறார். திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமம், 300 ஆண்டுகள் தொன்மையானது. இந்த ஆஸ்ரமத்தின், 11வது பட்டமாக திகழ்ந்த ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீரங்க ராமானுஜ மகாதேசிகன் ஜீயர் சுவாமிகள், மார்ச் 19ல், 84வது வயதில் முக்தியடைந்தார்.அதனால், ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த ஸ்ரீமன் யாமுனாச்சாரியார் சுவாமிகள், ஸ்ரீ வராக மஹா தேசிக சுவாமிகள் என்ற திருப்பெயரில், ஆஸ்ரமத்தின் 12வது ஜீயராக பதவியேற்க உள்ளார்.ஸ்ரீவராக மகா தேசிக சுவாமிகள், ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் ஜீயராக பதவி ஏற்கும் விழா, இன்று நடக்கிறது. இத்தகவலை, ஆஸ்ரம சேர்மன் ராஜகோபால் தலைமையிலான குழு அறிவித்து உள்ளது.