உடல்நிலை மேம்பட...
ADDED :2585 days ago
சிலருக்கு உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் போகும். என்ன மருந்து சாப்பிட்டாலும் குணமாகாது. உடனே மருத்துவர் உணவுக்கட்டுப்பாடு விதிப்பார். வேத காலத்திலேயே இது இருப்பதை, ’யோ புங்தே அஹமேவ பங்தே’ என்னும் ஸ்லோகம் சொல்கிறது.இதற்கு ’யார் என்னை அதிகம் சாப்பிடுகிறானோ, அவனை நான் சாப்பிடுகிறேன்’ என்பது பொருள். அளவோடு சாப்பிட வேண்டும். சாப்பிடும் முன் ஸ்லோகம், பக்திப் பாடல்களைச் சொல்ல வேண்டும். இஷ்ட தெய்வத்திற்கு உணவை மானசீகமாக நைவேத்யம் செய்ய அது பிரசாதமாக மாறும். அதை சாப்பிட நோய் பறந்தோடும்.