நோய்க்கு சிவப்பு கம்பளம்
ADDED :2585 days ago
எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்பட்டுள்ளதற்கு காரணம், நமது மகான்களின் சொல்லைக் கேட்காததால் வந்த விளைவு தான். இயேசுநாதர் இதுகுறித்து எச்சரித்துள்ளார். “பர ஸ்திரீகளின் (விலைமாதர்) அழகைக் கண்டு உன் இருதயத்தில் காமுற்று திரியாதே. அவள் தன் கண்ணிமை களினால், உன்னைக் கவர்ந்து கொள்ளவும் இடம் கொடாதே. அவளது உதடு தேன் ஒழுகும் கூடு. அவளுடைய வாயோ எண்ணெயிலும் மிருது. ஆனால் அவள் போக்கின் முடிவோ எட்டிக்காய் போல் கசக்கும். இருபுறமும் முனையுள்ள வாள் போல் கூர்மையாயிருக்கும். அவளுடைய கால்கள் மரணத்தை நோக்கியே இறங்கும். அவளுடைய காலடிகள் நரகத்திலேயே உறுதியாகப் பற்றிக் கொண்டு நிற்கும்” என்பது அவரது எச்சரிக்கை. இயேசுவின் இந்த அறிவுரையை ஏற்றுக் கொண்டாலன்றி, கொடிய நோய்களுக்கு சிவப்புக்கம்பளம் விரித்துதான் ஆக வேண்டும்.