இந்திர துவஜ் பூஜை நிறைவு விழா
ADDED :2539 days ago
புதுச்சேரி: உலக அமைதி வேண்டி புதுச்சேரி ஜெயின் கோவிலில் நடந்த இந்திர துவஜ் பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது. புதுச்சேரி வள்ளலார் சாலையில் உள்ள ஜெயின் கோவிலுக்கு, 108 விசுத் சாகர்ஜி முனிவரின் சீடர்களான 108 அர்ஜித் சாகர்ஜி, 108 கோம்ய சாகர்ஜி ஆகியோர், 2,500 கிலோமீட்டர் நடந்து வந்தனர். இருவரின் முன்னிலையில் கடந்த 8 நாட்களாக உலக மக்கள் நலம், உலக அமைதி வேண்டி இந்திர துவஜ் எனும் பூஜை நடந்தது. பூஜையின் நிறைவு விழா நேற்று நடந்தது. இதைத் தொடர்ந்து, ஜெயின் கோவிலில் சிறப்பு ஹோமம் நடந்தது. அதைத் தொடர்ந்து ஜெயினர்கள் ஊர்வலமாக புறப்பட்டு, 45 அடி சாலை வழியாக சென்று, அண்ணா சாலை மற்றும் பாரதி வீதியில் உள்ள ஜெயின் கோவில்களில் தரிசனம் முடித்து மீண்டும் வள்ளலார் சாலையில் உள்ள ஜெயின் கோவிலை அடைந்தனர்.