ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா பூஜை
ADDED :2536 days ago
கிருஷ்ணராயபுரம்: கருப்பத்தூர் ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, தீர்த்தகுட ஊர்வலம், 108 கலச பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்தூரில், ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடக்கிறது. விழாவை முன்னிட்டு, நேற்று காலை தீர்த்த குட ஊர்வலம் நடந்தது. அதன் பின், 108 கலசங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. மாலையில் அஸ்த்ர கலச பூஜை நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சாஸ்தா தாசன் குழுவினரின், பக்தி பாடல் இசை நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது.