அய்யப்பனை காண வரமாட்டோம்: பெண்கள் சத்திய பிரமாணம்
ADDED :2641 days ago
திருவொற்றியூர் : திருவொற்றியூரில் நடந்த ஊர்வலத்தில், அய்யப்பனை காண வரமாட்டோம் என, பெண்கள் சத்தியபிரமாணம் எடுத்துக் கொண்டனர். சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க, அனைத்து வயது பெண்களை அனுமதிக்க, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்நிலையில், திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவில் முன், சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தினர், 200க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை, 5:00 மணியளவில் திரண்டனர். அங்கிருந்து, அய்யப்பனை காண பெண்கள் வர மாட்டோம் என சத்தியபிரமாணம் எடுத்துக் கொண்ட பெண்கள், செண்டை மேளம் முழங்க, சரண கோஷ ஊர்வலம் சென்றனர்.இந்த ஊர்வலம், சன்னிதி தெரு, வடக்கு மாடவீதி, மேற்கு மாடவீதி, பெரிய மேட்டுபாளையம், காலடிபேட்டை மார்க்கெட் வழியாக, கல்யாண வரதாஜ பெருமாள் கோவில் முன் நிறைவடைந்தது.