உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனம் அடுத்த வேங்கை பட்டாபிராமர்கோவில் கும்பாபிஷேகம்

திண்டிவனம் அடுத்த வேங்கை பட்டாபிராமர்கோவில் கும்பாபிஷேகம்

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த வேங்கை கிராமத்திலுள்ள பட்டாபிராமர் மற்றும் முத்து மாரியம்மன், குப்புமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று (அக்., 29ல்) நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் (அக்., 28ல்) காலை வாஸ்துசாந்தி, கும்ப அலங்காரம், சாற்றுமறை மகா தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து நேற்று (அக்., 30ல்) காலை இரண்டாம் கால புண்யாவாசனம், கோபூஜை, சாந்தி ஹோமம், தீபாராதனையை தொடர்ந்து கடம் புறப்பாடாகி காலை 9.00 மணிக்கு முத்து விநாயகர், குப்பு மாரியம்மனுக்கும், காலை 10.30 மணிக்கு பட்டாபி ராமர் கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது.

முருக்கேரி சீனுவாச சுவாமிகள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். கும்பாபிஷேக விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ.,சேதுநாதன் மற்றும் கோவில் திருப்பணி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !