உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தின் மஹிமை

விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தின் மஹிமை

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு கீழ்கண்டவாறு விளக்குவார்:-

தர்மபுத்ரர் பீஷ்மரைக் கேட்டு அவரும் பதில் சொல்லி சங்கர பகவத் பாதாளும் பாஷ்யம் பண்ணியுள்ளதன் கருத்து:-

1. குருவாயூரப்பன் ஒருவனே தேவாதி தேவன்

2. அவர் தான் அடையவேண்டிய இடம்

3. அவரை ஸ்தோத்ரம் செய்வதே பூஜையாகும்

4. அந்த ஸ்தோத்திரத்தை (விஷ்ணு ஸஹஸ்ரநாமம்) பக்தியுடன் ஸதா ஜபிப்பதே எல்லாவற்றிலும் சிறந்த தர்மம்

5. பூஜை என்றால் அதற்கு பல ஸாதனங்கள் தேவை. விஷ்ணு ஸஹஸ்ரநாம ஜபமானது, ஸ்தோத்ரம்/பூஜை இரண்டையும் செய்ததாகும்.

விஷ்ணு ஸஹஸ்ரநாம பூர்வ பாகம் - 13 வது ஸ்லோகம்

ஏஷமே ஸர்வதர்மாணாம் தர்மோதிகதமோமத:

யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்சேன் நர: ஸதா

6. விஷ்ணு ஸஹஸ்ரநாம ஜபத்தால் இம்மையில் எல்லாம் கிடைத்து முடிவில் முக்தியில் கிடைக்கும்.

1. பீஷ்மர் விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தை தர்மபுத்ரருக்கு சொல்லும்போது க்ருஷ்ண பகவானே பக்கத்தில் இருந்தார்.

2. ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ பாராயணம் பூர்த்தியானவுடன் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தை செய்யும்படி ஸ்ரீமத் பாகவத மாஹாத்மியத்தில் வியாசர் சொல்லியிருக்கிறார். (பத்மபுராணம்) மாஹாத்மியம் 6 வது அத்யாயம் 62/63 ஸ்லோகங்கள். ஸப்தாஹ பாராயணத்தில் என்ன குறைபாடுகள் இருந்தாலும் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் போக்கிவிடும். விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்திற்கு மேல் வேறு ஒன்றும் இல்லை.

கூடணூணிதஞ்ட tடச்t, ஞுதிஞுணூதூ ணீஞுணூஞூணிணூட்ச்ணஞிஞு ஞடிஞீண் ஞூச்டிணூ tணி ஞஞுஞிணிட்ஞு ஞூணூதடிtஞூதடூ டிண ச்ண் ட்தஞிட ச்ண் tடஞுணூஞு டிண் ணணிtடடிணஞ் ட்ணிணூஞு ஞுஞூஞூடிஞிச்ஞிடிணிதண் tடச்ண tடச்t.

“நாஸ்த்யஸ்மாத் அதிகம் யத:”

3. எல்லா தர்மங்களிலும் மேலான தர்மம் இது. பலஸ்ருதியில் வரும் ஸ்லோகங்கள் எல்லாம் உண்மையானவைதான். (உதுச்ஞ்ஞ்ஞுணூச்tடிணிண) இல்லை என்று ஆதிசங்கரர் பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார்.

4. கர்ம மார்க்கத்திலும் யக்ஞம் பூர்த்தியானவுடன் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்வார்கள். இந்த பாராயணத்தால் எல்லா கர்மாக்களும் நன்றாக பூர்த்தியானதாக பகவான் ஏற்றுக் கொள்வார்.

7. பலஸ்ருதி-

1. 6வது ஸ்லோகம்

யஸ: ப்ராப்னோதி விபுலம் யாதி ப்ராதா ன்யமேவ ச.

சுத்தமான கீர்த்தியை அடைவான். சுற்றதார்களுக்குள் முக்கிய ஸ்தானத்தில் இருப்பான்.

2. 8வது ஸ்லோகத்தின் வரிகள்
ரோகார்தோ முச்யதே ரோகா த்” -

கடப்பையாதி ஸங்க்யைப்படி 632 தடவைகள் பாராயணம் செய்தால் ஸகல ரோகங்களும் நிவர்த்தியாகும்.

9 வது ஸ்லோகத்தின் படி

“துர்கான் யதி தரத்யாஸு ” - 538 ஆவர்த்திகள் செய்தால் எல்லா கஷ்டங்களும் நிவர்த்தியாகும்.

3. 4வது ஸ்லோகத்தின் படி

“ப்ரஜார்த்தீ சாப்நுயாத் ப்ரஜாம் - 782 தடவைகள் படித்தால் ஸத்புத்ர பாக்யம் ஏற்படும்.

8. கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் 1990 ல் ஒரு பக்தருக்கு கீழ்க்கண்டவாறு அவர் கையால் எழுதிக் கொடுத்ததைப் பார்ப்போம்:

“ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமைக்கு ஈடு இணையில்லை. அதுவே எல்லா சிரமங்களையும் நீக்கி விடும். அதுவே எல்லா க்ஷேமத்தையும் அளிக்கும். அதிலும் ஒரு விஷயம் 91வது தசகத்தில் 5 வது ஸ்லோகத்தில் ஸ்ரீபட்டத்ரி, சரித்திரம் + நாம ஜபம் இருண்டும் துல்லியமாக இருக்க
வேண்டும் என்று உபயத: என்று மறுபடியும் சொல்கிறார். விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் அவதார சரித்திரம் முழுவதும் அடங்கியுள்ளதாக ‘பட்டர்’ என்ற வைஷ்ணவ ஆச்சாரியார் வியாக்யானம் செய்துள்ளார். அதே நேரத்தில் நாம ஜபமும் ஆகிறது. ஆகையால் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் ஒன்று மூலம் 1 நாளில் எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ அவ்வளவு நேரம் ஜபித்தால் இரண்டையும் (சரித்திரம், நாம ஜபம்) செய்ததாகி விடுகிறது.”

9. மஹா பெரியவாள் தினம் பிக்ஷை செய்ய ஆரம்பிக்குமுன் அங்கிருக்கும் சிஷ்யர்களை விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரத்தை சொல்லும்படி சமிக்ஞை செய்வார். (தலையில் கையினால் குட்டிக் கொண்டு சமிக்ஞை செய்வார். ‘சுக்லாம்பரதரம்’ என்று ஆரம்பிக்க வேண்டும் என்று அர்த்தம்) அவர்கள் விஷ்ணுஸஹஸ்ர நாமத்தை தினம் இரண்டு ஆவர்த்தி சொல்லுவார்கள். பெரியவாள் ச்ரவனம் செய்து கொண்டே பிக்ஷை செய்வது வழக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !