திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்று ஏன் சொல்கிறார்கள்?
ADDED :2580 days ago
மனிதனின் கடைசிபட்ச நம்பிக்கையாக இருப்பது தெய்வமே. எதை இழந்தாலும் ஒரு மனிதன் நம்பிக்கை இழப்பது கூடாது. ‘கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும்கடவுள் படியளக்கிறார்’ என்பதெல்லாம் திக்கற்று நிற்பவர்களுக்காகச் சொல்லப் பட்டதே. திக்கற்றவர்கள் நல்ல நிலை அடைய, ‘வெங்கடேச சரணௌ சரணம் பிரபத்யே’ ‘லட்சுமி நரசிம்மம் சரணம்பிரபத்யே’ போன்ற மந்திரங்களைபெரியவர்கள் ஏற்படுத்தி வைத்தார்கள். முடிந்த போதெல்லாம் இந்த மந்திரங்களைச் சொல்லி வந்தால் நன்மை உண்டாகும்.