உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை அறநிலையத்துறைக்கு சொந்தமான, ரூ.10 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு

கோவை அறநிலையத்துறைக்கு சொந்தமான, ரூ.10 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு

கோவை:அறநிலையத்துறைக்கு சொந்தமான, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள, ஒன்றரை ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் நேற்று (அக்., 30ல்), மீட்டனர்.கோவை வெள்ளலூரிலுள்ளது, பழம் பெருமை வாய் ந்த, கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில். இக்கோவில், கடந்த சில மாதங்களுக்கு முன்பே, அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.இந்நிலையில், கோவிலுக்கு சொந்தமான, வழித்தடம் மற்றும் கோவிலைச் சுற்றியுள்ள இடம் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்தது. இதை அப்புறப்படுத்த கோர்ட் உத்தரவிட்டது.அதன்படி நேற்று, (அக்., 30ல்) அறநிலையத்துறை உதவி கமிஷனர் விமலா, தெற்கு கோட்டாட்சியர் தனலிங்கம், செயல் அலுவலர் மற்றும் தக்கார் கைலாஷ், மதுக்கரை தாசில்தார் விஜயலட்சுமி ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று (அக்., 30ல்), வெள்ளலூர் கரிவரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு சொந்தமான 1.54 ஏக்கர் இடத்தை தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டனர். இதன் மதிப்பு, 10 கோடி ரூபாய்.இது குறித்து, உதவி கமிஷனர் விமலா மற்றும் செயல் அலுவலர் கைலாஷ் கூறுகையில்,கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு சொந்தம் கொண்டாடஎவரும் நினைக்க வேண்டாம். ஆக்கிரமித்துள்ளவர்கள் தாமாக திருப்பி அளிப்பது நல்லது,என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !