உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ப்ராணப்ரதிஷ்டை

ப்ராணப்ரதிஷ்டை

ப்ராணப்ரதிஷ்டா

ப்ராணபிரதிஷ்டை என்பது எந்த தெய்வத்தை பூஜை செய்கிறோமோ அந்த விக்ரஹம் அல்லது பிம்பத்திற்கு ப்ராணனை (உயிர்) கொடுத்து பூஜை செய்வதை ப்ராணப்பிரதிஷ்டை என்கிறோம். ப்ராணபிரதிஷ்டை செய்யும் போது முதலில் பஞ்சகவ்யத்தை சிறிதளவு விக்ரஹம் அல்லது பிம்பத்தின் மேல் தெளிக்கவும். ஸ்வாமி படத்திற்கு ப்ராணப்ரதிஷ்டை கிடையாது.

ப்ராணப்ரதிஷ்டா மந்த்ர:

............ கோட்டிட்ட இடங்களில் எந்த தெய்வத்தை பூஜை செய்கிறீர்களோ அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லவும்.

ஓம் அஸ்ய ஸ்ரீ ...........
ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய

(வலதுகையை தலையின் மேல் வைத்து சொல்லவும்.)

ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்’வரா: ருஷய:

(வலதுகையை மூக்கின் மேல் வைத்துச் சொல்லவும்.)

ருக் யஜுஸ்ஸாம அதர்வாணி ச்சந்தாம்ஸி

(வலதுகையை நடுமார்பில் வைத்துச் சொல்லவும்.)

ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி
ஸம்ஹார காரிணீ ப்ராணச ’க்தி:
பரா தேவதா

(வலதுகையை வலதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஆம் பீஜம்

(வலதுகையை இடதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஹ்ரீம் ச ’க்தி

(வலதுகையை நடுமார்பில் வைத்து சொல்லவும்.)
க்ரோம் கீலகம்

(இரண்டு கையையும் சேர்த்து கும்பிடவும்.)
ஸ்ரீ.........ப்ராண ப்ரதிஷ்டார்த்தே ஜபே விநியோக:

(ஆள்காட்டி விரலால் கட்டை விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)

ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:
(கட்டைவிரலால் ஆள்காட்டி விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:

(கட்டை விரலால் நடு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
க்ரோம் மத்யமாப்யாம் நம:

(கட்டை விரலால் மோதிர விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஆம் அனாமிகாப்யாம் நம:

(கட்டை விரலால் சுண்டு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் கனிஷ்டிகாப்யாம் நம:

(படத்தில் உள்ளபடி இரண்டுகைகளையும் தடவவும்.)

க்ரோம் கரதலகரப்ருஷ்ட்டாப்யாம் நம:
(ஹ்ருதயத்தில் கை வைக்கவும்.)

ஆம் ஹ்ருதயாய நம:

(தலையில் கை வைக்கவும்.)
ஹ்ரீம் சி’ரஸே ஸ்வாஹா

(குடுமியை தொட்டுச் சொல்லவும்.)
க்ரோம் சி’காயை வஷட்

(படத்தில் உள்ளதுபோல் செய்யவும்.)
ஆம் கவசாய ஹும்

(கண்களைத் தொட்டு மந்திரம் சொல்லவும்.)
ஹ்ரீம் நேத்ரத்ரயாய வௌஷட்

(இரண்டு கைகளையும் தட்டி சொல்லவும்.)
க்ரோம் அஸ்த்ராய பட்

(தலையை சுற்றிச் சொடுக்கு போட்டுக் கொண்டே சொல்லவும்.)
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

தியானம்

ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ
தருண ஸரோஜாதிரூடா கராப்ஜை:
பாச ’ம் கோதண்ட மிக்ஷூத்பவ
மளிகுண மப்யங்குச ’ம் பஞ்சபாணான்
பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிநயன
லஸிதா (ஆ) பீன வக்ஷோருஹாட்யா
தேவீ பாலார்க்கவர்ணா பவது
ஸுககரீ ப்ராணச ’க்தி: பரா ந:

ஆம் ஹ்ரீம் க்ரோம் க்ரோம் ஹ்ரீம் ஆம் அம், யம், ரம், லம், வம், ச ’ம், ஷம், ஸம், ஹம் ஹம்ஸ: ஸோஸஹம், ஸோஸஹம் ஹம்ஸ:

அஸ்யாம் மூர்த்தௌ .......(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)
ப்ராணஸ்திஷ்டது ...........(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)

ஜீவஸ்திஷ்டது ஸர்வேந்த்ரியாணி வாங்மனஸ் - த்வக் -சக்ஷு: -ச்’ரோத்ர -ஜிஹ்வா - க்ராண -வாங் - பாணி - பாத - பாயூபஸ்தானி இஹாகத்ய ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்டந்து ஸ்வாஹா ஸான்னித்யம் குரு ஸ்வாஹா

(அக்ஷதை, புஷ்பம், ஜலம் இவை மூன்றையும் பிம்பத்தின் மீது போடவும்.)

அஸுனீதே புனரஸ்மாஸு சக்ஷு:
புன: ப்ராணமிஹ நோ தேஹிபோகம்
ஜ்யோக் பச்’யேம ஸூர்ய முச்சரந்த
மனுமதே ம்ருளயா ந: ஸ்வஸ்தி

பஞ்சதச ’ ஸம்ஸ்காரார்த்தம் பஞ்சதச ’ வாரம் ப்ரணவஜபம் (ஓம் -15 முறை சொல்லவும்) க்ருத்வா ப்ராணான் ப்ரதிஷ்டாபயாமி

(மந்திரம் சொன்ன பிறகு பால், தேன், நெய் கலந்து ஒரே பாத்திரத்தில் ப்ராண சக்திக்கு நிவேதனம் செய்யவும்.)

ஆவாஹிதோ பவ

ஸ்தாபிதோ பவ

ஸன்னிஹிதோ பவ

ஸன்னிருத்தோ பவ

அவகுண்டிதோ பவ

ஸுப்ரீதோ பவ

ஸுப்ரஸன்னோ பவ

ஸுமுகோ பவ

வரதோ பவ

ப்ரஸீத ப்ரஸீத

(கையினால் பிம்பத்தைத் தொட்டுச் சொல்லவும்.)

(ஒரு தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமியின் ஸர்வஜகன்நாத
யாவத் பூஜாவஸானகம்
தாவத் த்வம் ப்ரீதி பாவேன
பிம்பே (அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

சித்ரபடே (படமாகயிருந்தால்), கலசே ’ (கலசமாகயிருந்தால்) கும்பேஸ்மின் (கும்பத்திற்கு), ப்ரதிமாயாம் (யந்திரத்திற்கு)

(பல தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமின: ஸர்வஜகன்நாதா:
யாவத் பூஜாவஸானகம்
தாவத் யூயம் ப்ரீதிபாவேன
பிம்பே(அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

பெண்தேவதையாக இருந்தால் கீழ்கண்டவாறு சொல்லவும்.

தேவி ஸர்வ ஜகன்மாதே

பிறகு அந்தந்த பிரதான பூஜையைத் தொடரவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !