செய்யூர் கந்தசுவாமி கோவிலுக்கு, கொடிமரம் எப்போது?
ADDED :2592 days ago
செய்யூர்: செய்யூர் கந்த சுவாமி கோவிலுக்கு, புதிதாக கொடிமரம் அமைக்கப்படுமா என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.செய்யூரில் உள்ள கந்த சுவாமி கோவிலுக்கு, தமிழகத்தின் பல
பகுதிகளிலிருந்து, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
அரசியல்வாதிகள், வி.ஐ.பி.,க்கள் பலரும் வருவர்.இக்கோவிலில், கொடிமரம் உடைந்து விழுந்து இரண்டாண்டுகள் ஆகின்றன. அறநிலையத் துறை அதிகாரிகள், இதைக் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், அவர்களுக்கு விருப்பம் இல்லையென்று தெரிவித்தால், தனியாரிடம் பணம் வசூலித்து, கோவிலில் புதிதாக கொடிமரம் அமைக்கும் முடிவில், பக்தர்கள் உள்ளனர்.