பழநி வின்ச் தண்டவாள பாதை புதுப்பிப்பு
ADDED :2527 days ago
பழநி: பழநி முருகன் கோயில் வின்ச்’ (மின்இழுவை ரயில்) தண்டவாளப்பாதையில், சிமென்ட் சிலீப்பர்களுக்கு இணையாக படிக்கட்டுகளை உயர்த்தி, புதுப்பிக்கும் பணி நடக்கிறது. பழநி முருகன் கோயில் மலைக்கு எட்டு நிமிடங்களில் செல்லும் வகையில் நாள்தோறும் மூன்று வின்ச்’கள் இயக்கப்படுகின்றன. இதன் தண்டவாளப் பாதையில் மரக்கட்டைகளுக்கு பதிலாக, சிமென்ட் சிலீப்பர்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் உயரத்திற்கு ஏற்றவாறு படிக்கட்டுகளை உயர்த்தி, புதுப்பிக்கும் பணி நடக்கிறது. அதன்பின் படிக்கட்டு உயரத்திற்கு ஜல்லிக்கற்களை கொட்டி சிமென்ட் சிலீப்பர்களை பலப்படுத்தப்பட உள்ளதாக கோயில் அதிகாரிகள்
தெரிவித்தனர்.