ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் வெள்ளம்
ADDED :2578 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த பலத்த மழையால் ராமநாதசுவாமி கோயிலுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.வடகிழக்கு பருவ மழை துவங்கியதால் ராமேஸ்வரம், பாம்பன் தீவு பகுதியில் நேற்று கன மழை கொட்டியது. இதனால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரதவீதியில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் கோயில் கிழக்கு, மேற்கு வாசல் வழியாக புகுந்து முகப்பு மண்டபத்தில் தேங்கியது.கோயிலில் இருந்து மழைநீர் செல்ல வாறுகால் நிரம்பி, மழைநீர் அம்மன் சன்னதி, தெற்கு மூன்றாம் பிரகாரத்திலும் குளம்போல் தேங்கியது. இதனால் பக்தர்கள் நீராட, தரிசனம் செய்ய சிரமம் அடைந்தனர். மழை நின்ற 30 நிமிடத்தில் மோட்டார் வைத்து தண்ணீரை கோயில் ஊழியர்கள் வெளியேற்றினர்.