உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரித்திரச் சான்று!

சரித்திரச் சான்று!

தீபாவளிப் பண்டிகை பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது என்பதற்கு பல்வேறு கல்வெட்டுக் குறிப்புகளும் சரித்திரச் சான்றுகளும் உள்ளன. கி.பி. 1119-ம் ஆண்டு சாளுக்கிய மன்னன் திரிபுவன சக்கரவர்த்தி என்பவரால் தீபாவளி நாளன்று அந்தணர்களுக்கு நாணயங்களும் பரிசுப்பொருட்களும் தானமாகத் தரப்பட்ட விவரம், கன்னட கல்வெட்டு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்திலுள்ள ‘ஆகாச பைரவ ஜல்பம்’ என்ற நூலில் தீபாவளியன்று வாணங்கள் கொளுத்துவதைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.


தேவசூரி என்னும் வடமொழி ஆராய்ச்சி அறிஞர் தாம் எழுதிய ‘யாற்திலகசம்பு’ எனும் காப்பியத்தில் தீபாவளிக்காக வீடெங்கும் வெள்ளையடித்து தோரணங்கள் கட்டி அலங்காரங்கள் செய்து மக்கள் மகிழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மொகலாயர் காலத்து எழுத்தாளரான அல்பெருனி என்பவர் தனது தசீக - ஐ- ஹந்த் எனும் நூலில் தீபவாளிப் பண்டிகை மகாபலியை லட்சுமி மீட்டதன் நினைவாகக் கொண்டாடப்பட்டதாகவும், அன்று புத்தாடை அணிந்து அனைவரும் கோயில்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டு எளியவருக்கு பரிசும் தானமும் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார். 16, 17, 18-ம் நூற்றாண்டுகளில் படைக்கப்பட்ட பாங்காரா, ராஜசுதன ஓவியங்களில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படும் காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !