உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சானுார் பத்மாவதி தாயார் பிரசாதம்: இனி அஞ்சலில் கிடைக்கும்

திருச்சானுார் பத்மாவதி தாயார் பிரசாதம்: இனி அஞ்சலில் கிடைக்கும்

திருப்பதி: திருச்சானுார் பத்மாவதி தாயார் பிரசாதத்தை, அஞ்சல் மூலம் அனுப்பும் திட்டத்தை, திருமலை தேவஸ்தானம் துவக்கி உள்ளது.

திருமலை ஏழுமலையான் கோவிலில், தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பல மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள், தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் கூறியதாவது: திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு, டிசம்பரில், வருடாந்திர பிரம்மோற்ஸவம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. திருமலை ஏழுமலையானுக்கு, 500 ரூபாய்க்கு மேல் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு, ஆசீர்வாதம் திட்டத்தின் கீழ், ஏழுமலையான் பிரசாதம், அட்சதை உள்ளிட்டவை அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.அதேபோல், திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு நன்கொடை வழங்குவோருக்கும், அதே திட்டத்தை தேவஸ்தானம் துவக்கி உள்ளது. இதற்கு பக்தர்களிடம் வரவேற்பும் அதிகரித்துஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !