தாம்பரம் சாலையோரம் அம்மன் சிலை
ADDED :2529 days ago
தாம்பரம்: ஜி.எஸ்.டி., சாலையோரம் கிடந்த, வெண்கல அம்மன் சிலையை போலீசார் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். தாம்பரத்தில், ஜி.எஸ்.டி., சாலையோரம், நேற்று (நவம்., 4ல்) மாலை, 1 அடி உயர முள்ள, வெண்கல அம்மன் சிலை ஒன்று, புதரில் கிடந்தது.
அப்பகுதியில், பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்தவர், இதை பார்த்து, போலீசுக்கு தகவல் தெரிவித் தார்.அங்கு சென்ற தாம்பரம் போலீசார், அம்மன் சிலையை, காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்த சிலை குறித்தும், புதரில் வீசி சென்றோர் குறித்தும், தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.