சென்னிமலை மாரியம்மன் கோவிலில் பூவோடு எடுத்து வழிபாடு
ADDED :2529 days ago
சென்னிமலை: சென்னிமலையில், காங்கேயம் சாலையில் உள்ள, மாரியம்மன் கோவிலில், பொங்கல் விழா நடந்து வருகிறது. இதை முன்னிட்டு தினமும், பூவோடு எடுத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். கோவில் பூசாரி வாசு, பூவோடு எடுத்து, கோவில் உள் பிரகாரத்தில், நேற்று (நவம்., 4ல்) வலம் வந்தார். வரும், 8ம் தேதி பொங்கல் விழா, வெகு விமரிசையாக நடக்கிறது. அன்று மாலை, பலர் வேஷமிட்டு, ஊர்வலமாக வந்து மாரியம்மனை வழிபடுவர்.