உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்காசி கோயிலில் வருஷாபிஷேக விழா

தென்காசி கோயிலில் வருஷாபிஷேக விழா

தென்காசி : தென்காசி தட்சிணாமூர்த்தி கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. தென்காசி செங்கோட்டை ரோட்டில் மின்வாரிய அலுவலகம் அருகில் வேத வியகம ஆசிரமத்தில் ஆதிகுருயோக தட்சிணாமூர்த்தி கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் 5வது வருஷாபிஷேக விழா நடந்தது. அன்று காலையில் அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜை வழிபாடு, மாலையில் கூட்டு பிரார்த்தனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக் கமிட்டியார் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !