உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுவலவு கோவில் நாளை கும்பாபிஷேகம்

மேட்டுவலவு கோவில் நாளை கும்பாபிஷேகம்

கோபிசெட்டிபாளையம்: கொளப்பலூர் மேட்டுவலவு முத்துமாரியம்மன் கோவில் பிப்., 12 தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று விநாயகர் வழிபாடு, புன்யாவாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, லட்சுமி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. இன்று காலை 9 மணிக்கு மேல் தீர்த்தம் எடுத்து வருதல், இரவு 9 மணிக்கு வாஸ்து பூஜை, பூமாதேவி வழிபாடு, காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், ஸ்வாமி யாக சாலைக்கு அழைத்து வருதல், முதல்கால யாக பூஜை, 108 வகை மூலிகை வகை ஹோமம், தீபாராதனை, சுவாமிக்கு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது. நாளை அதிகாலை 4 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை, கலசங்கள் யாக சாலையில் இருந்து வலம் வருதல், காலை 7.30 மணிக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை, தரிசனம், காலை 9 முதல் 2 மணி வரை அன்னதானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !