உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாயமான தமிழக பொக்கிஷம்

மாயமான தமிழக பொக்கிஷம்

நாகப்பட்டினம், :நாகை, திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மரகதலிங்கம் மாயமாகி, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், துப்பு எதுவும் கிடைக்காததால், நாகை போலீசார் திணறி  வருகின்றனர்.

நாகை மாவட்டம், திருக்குவளையில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பிரம்மபுரீஸ்வர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. போரில்  வெற்றிஇந்திரனை துன்புறுத்திய அசுரர்களை, முசுகுந்த சக்கரவர்த்தி போரிட்டு வென்றால், தம்மிடம் இருக்கும் மரகதலிங்கத்தை தருவதாக, இந்திரன் கூறியதால், அசுரர்களை முசுகுந்த சக்கரவர்த்தி  போரில் வென்றார்.இதையடுத்து, தம்மிடம் இருந்த அரிய மரகதலிங்கத்தை தர மனமில்லாத இந்திரன், தேவசிற்பியான மயனை வரவழைத்து, தன்னிடம் இருந்த மரகதலிங்கம் போல் ஆறு வித  மரகதலிங்கத்தை உருவாக்கி, அதில் உண்மையான மரகதலிங்கத்தை எடுத்துக் கொள்ளுமாறு முசுகுந்தனிடம் கூறினார். இறைவனை வேண்டி சரியான மரகதலிங்கத்தை முசுகுந்தன் எடுத்ததால்,  இறைவனின் திருவிளையாடலை உணர்ந்த இந்திரன், ஏழு வித லிங்கங்களையும் அவரிடமே கொடுத்தார்.ஏழு இடங்கள்திருவாரூர், திருநள்ளார், திருக்குவளை, திருவாய்மூர், நாகை, வேதாரண்யம்,  திருக்கரவாசல் ஆகிய ஏழு இடங்களில் பிரதிஷ்டை செய்து முசுகுந்தன் வழிபட்டார். இவ்விடங்கள் சப்தவிடங்கள் என்றழைக்கப்படுகிறது.நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் இருந்த கோமேதக  லிங்கம், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வர் கோவில், திருக்காரவாசல் கோவில்களில் இருந்த மரகதலிங்கங்கள் பல்வேறு காலக்கட்டங்களில் மாயமாகியுள்ளன. இவை, 15 ஆண்டு களுக்கு முன்,  மாயமானவை. இன்னும் போலீசாரால் மீட்கப்படாமல் உள்ளன.இந்நிலையில், திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அவனி விடங்கர் என்றழைக்கப்பட்ட மரகதலிங்கம், 2016 அக்டோபர் மாதம்  மாயமானது. இந்த மரகதலிங்கம், 1983ல் தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது.அரிய பொக்கிஷமான இதுபோன்ற லிங்கங்களை, சர்வதேச கொள்ளை கும்பலே குறி வைத்து, உள்ளூர்  சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்து, கொள்ளையடித்து வருவதாக, பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எதிர்பார்ப்புகொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடியப்  போதும், எவ்வித துப்பும் கிடைக்காமல், இரண்டு ஆண்டுகளாக நாகை போலீசார் திணறி வருகின்றனர். எனவே சிலை கடத்தல் தடுப்பு, ஐ.ஜி.,பொன் மாணிக்கவேல் இவ்வழக்குகளில் தனி கவனம்  செலுத்த வேண்டும் என, பக்தர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !