உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீபாவளி வரக்காரணம்

தீபாவளி வரக்காரணம்

தீபாவளி கொண்டாடுவதற்கு ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ராவணனைக் கொன்ற ராமர் வனவாசத்தையும் முடித்து விட்டு மனைவி சீதையுடனும், தம்பி  லட்சுமணனுடனும் அயோத்திக்கு திரும்பிய நாளே தீபாவளி என்பர் சிலர். பகவான் விஷ்ணு, லட்சுமி தேவியின் திருமண நாளை சிலர் தீபாவளி என்கின்றனர். சில இடங்களில் குருநானக் பிறந்த  தினத்தையும் மற்றும் சில இடங்களில் ஆதிசங்கரர் ஞான பீடத்தை நிறுவிய தினத்தையும், வேறு சில இடங்களில் சந்திரகுப்த விக்கிரமாதித்தன் அரியணை ஏறிய தினத்தையும் கொண்டாடுகின்றனர்.  எத்தனை காரணங்கள் இருந்தாலும் நரகாசுரனை கிருஷ்ண பகவான் வதம் செய்த நாளே தீபாவளி என்பது தான் பொதுவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !