உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கைக்கும் மேலான காவிரி

கங்கைக்கும் மேலான காவிரி

தீபாவளி குளியலை கங்கா ஸ்நானம் பெருமையாகச் சொல்கிறோம். ஆனால் இந்த ஸ்நானத்தை உருவாக்கிய கிருஷ்ணரோ, தன் பாவம் தீர காவிரிக்கு கரைக்கு வந்தார். வீரனான நரகாசுரனைக்  கொன்றதால் அவருக்கு வீரஹத்தி தோஷம் உண்டானது. அவரது நீலமேனி வண்ணம் ஒளியிழந்து மங்கிப்போனது. அதை தீர்க்க கைலாயம் சென்று சிவனிடம் உபாயம் கேட்டார். “கிருஷ்ணா! துலா  மாதமான ஐப்பசி மாதம் முழுவதும் சூரிய உதயத்தில் இருந்து ஆறு நாழிகை (2மணி 24 நிமிடம்) நேரத்திற்குள் காவிரியில் நீராடினால், வீரஹத்தி தோஷம் நீங்கும்” என்றார். கங்கா  ஸ்நானத்திற்கு அருள் செய்த கிருஷ்ணர் தீபாவளியன்று காவிரியில் நீராடித் தன் பாவம் போக்கினார். இதனால் கங்கையை விட காவிரியும் முக்கியத்துவம் பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !