உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவிலில் கேதாரகவுரி நோன்பு வழிபாடு

அம்மன் கோவிலில் கேதாரகவுரி நோன்பு வழிபாடு

விழுப்புரம்: தீபாவளி பண்டிகையையொட்டி, விழுப்புரத்தில் அம்மன் கோவிலில் கேதாரகவுரி விரத நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மந்தக்­கரை அருகே மழுகரம் ஏந்திய முத்து மாரியம்மன் தீபாவளி பண்டிகையையொட்டி, கேதார கவுரி விரத நோன்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி, காலை 4.00 மணிக்கு அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பெண்­கள் விரதம் இருந்து கொண்டு வந்த மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம்,
நோன்பு கயிறுகளை கலசத்தில் ஏந்தி, வழிபாடு செய்தனர். பின்னர் அந்த மங்­கலப்பொருட்­களை வீடுகளுக்கு எடுத்துச்சென்று, பூஜித்து நோன்பு கயிறு கட்டிக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !