உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சியில் கேதார கவுரி நோன்பு விரதம்

காஞ்சியில் கேதார கவுரி நோன்பு விரதம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கேதார நோன்பு விரதமிருந்தவர்கள், நோன்பு பலகாரங்களுடன் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். அதன்படி காஞ்சி புரம், ஏகாம்பரநாதர் கோவில், மாவடி சன்னிதி யில், நோன்பு பலகாரம் மற்றும் பூஜை பொருட்களுடன் நீண்ட வரிசையில் நின்று, சுவாமியை வழிபட்டனர்.கூட்ட நெரிசல்கேதார கவுரி நோன்பின்போது, வடை, பாயசம், பழ வகைகளுடன் நோன்பு பலகாரங்கள் செய்து வழிபாடு நடத்தப்படுகிறது.

இதற்காக, பூஜை பொருட்கள் வாங்க, காஞ்சிபுரம், ராஜாஜி மார்க்கெட்டில், நோன்பு கயிறு, காய்கறிகள், பழங்கள் வாங்க பொதுமக்கள் குவிந்ததால், கூட்ட நெரிசல்ஏற்பட்டது.
திருப்போரூர்திருப்போரூர், கந்த சுவாமி கோவில், வெளிபிரகாரத்தில் புண்ணியகாருண்ய அம்மன் சன்னதியில், நேற்று (நவம்., 7ல்), காலையில் இருந்தே, கேதார கவுரி வழிபாட்டில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். குடும்பஒற்றுமை, சுமங்கலி பிரார்த்தனைக்காகஅதிரச படையலுடன் குவிந்தனர்.அம்மன் காலடியில் நோன்பு கயிறுகளை வைத்து, பூஜித்து எடுத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !