பழநியில் மானூர் சுவாமி குருபூஜை விழா
ADDED :2597 days ago
பழநி: பழநி அருகே கோதைமங்கலம் குருநாதர் மானூர் சுவாமி கோயிலில் 74ஆம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, சிறப்பு யாகபூஜையும், மானூர் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
ஆன்மிக சொற்பொழிவுகள், அகவல்பாராயணமும், காலை 10.30மணிக்கு சாதுக்களுக்கு மகேஸ்வர பூஜையும் அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7:15மணிக்கு அம்மாவாசை சிறப்புபூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (நவம் 8ல்.,) சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடைபெறுகிறது.-