உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் அருகே நெடுமரம் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் நவ.14ல் கும்பாபிஷேகம்

திருப்புத்தூர் அருகே நெடுமரம் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் நவ.14ல் கும்பாபிஷேகம்

திருப்புத்தூர், திருப்புத்தூர் அருகே நெடுமரத்தில் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நவ.,14 ல் நடக்கிறது.

பல ஆண்டுகளாக இக்கோயில் கும்பாபிஷேகம்ம் நடக்கவில்லை. பக்தர்கள் கோரிக்கையை ஏற்று, லட்சுமி நாராயண பெருமாள், லட்சுமி ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார் சன்னதிகளுக்கு திருப்பணிகள் நடந்தன. நவ., 14 ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக நவ., 12 ல் யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. நவ.,13 காலையில் மகா கும்ப ஸ்தாபனம், மாலையில் 49 கலச அபிஷேகம், 9 கலச அபிஷேகம், கும்ப மண்டல ஆராதனம் நடக்கும். நவ.,14 ல் காலை 9:30 மணிக்கு கும்பங்கள் புறப்பாடாகி, காலை 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !