பரமக்குடியில் கவுரி நோன்பு விழா
ADDED :2635 days ago
பரமக்குடி: பரமக்குடி கேதார கவுரி அம்மன் கோயிலில் கவுரி நோன்பு விழா நவ., 7 அன்று காலையில் காப்புக் கட்டுதலுடன் துவங்கியது.
அன்று மாலை கவுரி நோன்பு உற்சவமும், மறுநாள் அம்பாள் கோலாட்ட அலங்காரத்தில் அருள்பாலித்தார்.சிறுமிகள் கோலாடம் ஆடி மகிழ்ந்தனர். நேற்று (நவம்., 8ல்) அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்தார். நவ., 10 அன்று மாலை அம்பாள் ஊஞ்சலில் சேவையும், மறுநாள் காலை பால்குடப் பெருவிழா மற்றும் மாலை புஷ்பப்பல்லக்கில் வீதியுலா நடக்க வுள்ளது. விழாவின் போது கலைநிகழ்ச்சிகள்நடந்து வருகிறது.