உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை, மீனாட்சி கோயிலில் ரூ.1.35 கோடி காணிக்கை

மதுரை, மீனாட்சி கோயிலில் ரூ.1.35 கோடி காணிக்கை

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் 1.35 கோடி ரூபாய், 720 கிராம் தங்க நகைகள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் உப கோயில் உண்டியல்கள் எண்ணும் பணி நடந்தது. இதில் பணமாக ஒரு கோடியே 35 லட்சத்து 59 ஆயிரத்து 73 ரூபாயும், 720 கிராம்  தங்க நகை, 1 கிலோ 312 கிராம் வெள்ளி, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை கரன்சிகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !