செஞ்சி வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :2524 days ago
செஞ்சி:வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.மேல்மலையனூர் தாலுகா வடவெட்டி ரங்க நாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கடந்த 7ம் தேதி முன்தினம் இரவு நடந்தது. இதை முன்னிட்டு காலை விநாயகர், பெரியாழி, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.மாலை 6 மணிக்கு உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனை யும் நடந்தது. இரவு 7 மணிக்கு இசை கச்சேரியும் இசை நிகழ்ச்சியும் நடந்து.இரவு 10.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனுக்கு ஊஞ்சள் தாலாட்டும், மகா தீபாராதனையும் நடந்தது.