உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லை திருப்பதி கோயிலில் சீனிவாச திருக்கல்யாணம் கோலாகலம்

நெல்லை திருப்பதி கோயிலில் சீனிவாச திருக்கல்யாணம் கோலாகலம்

திருநெல்வேலி : நெல்லை ஜங்ஷன், சன்யாசி கிராமம் நெல்லை திருப்பதி வேங்கடாஜலபதி கோயிலில் சீனிவாச திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. நெல்லை ஜங்ஷன், மீனாட்சிபுரத்தை அடுத்த சன்யாசி கிராமத்தில் உள்ள நெல்லை திருப்பதி வேங்கடாஜலபதி கோயிலில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத சீனிவாச பெருமாள் நூதன உற்சவர் பஞ்சலோக விக்ரஹ பிரதிஷ்டையை முன்னிட்டு 11ம்தேதி யாகசாலை பூஜை மற்றும் ஊஞ்சல் உற்வசம் நடந்தது. நேற்று காலை யாகசாலை பூஜை, கோ பூஜை மற்றும் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத சீனிவாச பெருமாள் விக்ரஹ பிரதிஷ்டை நடந்தது. மாலை 4மணிக்கு சீனிவாச திருக்கல்யாண மஹோத்ஸவம் கோலாகலமாக நடந்தது. இரவு 10 மணிக்கு கருட சேவை நிகழ்ச்சி நடந்தது. இதில் சன்யாசி கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருக்கல்யாண வைபவத்தை ராஜாமணி பட்டாச்சார்யார், சுந்தரராஜ பட்டாச்சார்யார் தலைமையில் பட்டாச்சார்யார் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !