ஓசூர் சபரிமலை தீர்ப்பை எதிர்த்து வழிபாட்டு ஊர்வலம்
ADDED :2525 days ago
ஓசூர்: சபரிமலைக்கு, 10 முதல், 50 வயது வரையுள்ள பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து, பல்வேறு பகுதிகளில் ஊர்வலம், போராட்டம் நடந்து வருகிறது. நேற்று, (நவம்., 9ல்)தேன்கனிக்கோட்டையில் பெண்கள் பலர் பங்கேற்ற, வழிபாட்டு ஊர்வலம் நடந்தது.
மாநில பா.ஜ., பொதுச்செயலாளர் நரேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நாராயணன் முன்னிலை வகித்தார். தேன்கனிக்கோட்டை ஐயப்பன் கோவில் அருகே துவங்கிய ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. பேரணியில், சபரிமலையின் புனிதம் காக்க வேண்டும் எனப்பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். பா.ஜ., நகர தலைவர் பார்த்திபன் உட்பட பலர் பங்கேற்றனர்.