கம்பம் பகவதி அம்மன் வீதிஉலா
ADDED :2525 days ago
கம்பம்:கம்பம் பகவதி அம்மன் கோயில் திருவிழா வண்டிவேட நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வீதிஉலா வந்த அம்மனை தரிசனம் செய்தனர்.கம்பம் பகவதி அம்மன் கோயில் திருவிழா கடந்த சில நாட்களாக நடந்தது. பக்தர்கள் மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரட்டை மாட்டுவண்டி போட்டி நடந்தது.மாலையில் சர்வஅலங்காரத்தில் சிங்கவாகனத்தில் அம்மன் முக்கிய வீதிகளில் உலா வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். வண்டிவேட நிகழ்ச்சியில் ஆடல்பாடல்,அம்மனின் பல்வேறு வடிவங்களில் பக்தர்கள் வலம் வந்தனர்.