புதுச்சேரியில் தத்தாத்திரேய ஹோமம் நாளை (நவம். 11ல்) நடக்கிறது
ADDED :2579 days ago
புதுச்சேரி:உலக நன்மைக்காக, தத்தாத்திரேய அபூர்வ பீஜமந்திர ஹோமத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.வில்லியனூர் அடுத்த மங்கலம் அய்யனார் கோவில் அருகே, கணபதி சச்சிதானந்தா ஆசிரமம் அமைந்துள்ளது. இங்கு, ஏகதின லட்ச ஆவர்த்தி தத்தாத்திரேய அபூர்வ பீஜமந்திர ஹோமம், நாளை (11ம் தேதி) நடக்கிறது.காலை 9 மணிக்கு துவங்கி, மாலை 4 மணி வரை நடக்கும் இந்த ஹோமத்தை ஒரே நாளில் லட்சத்துக்கும் மேற்பட்ட ஆவர்த்தியுடன், 50 வேத விற்பன்னர்கள் நடத்துகின்றனர். ஹோமத்தில் பங்கேற்பவர்கள், அனகலட்சுமி விரத பூஜை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மைசூர் அவதூததத்த பீடாதிபதி தத்த விஜயானந்த தீர்த்த சுவாமிகளின் ஏற்பாட்டின்படி, நாடு முழுவதும் பீஜமந்திர ஹோமம் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.