நாகலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :5020 days ago
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில், நாகேஸ்வரி உடனமர் நாகலிங்கேஸ்வரர் கோவில், கும்பாபிஷேகம் விழா நடந்தது. மேட்டுப்பாளையம் தாசம்பாளையம் ரோட்டில், பசுவையா நகரில் கட்டப்பட்ட இக் கோவில், கும்பாபிஷேக விழா விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. கோபுரங்களில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினர். அவிநாசி ஆதினம் வாகீசர் மடாலயம் காமாட்சிதாஸ சுவாமி கும்பிஷேகத்தை நடத்தி வைத்தார். எம்.எல்.ஏ., சின்னராஜ், நகர்மன்ற தலைவர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.