விநாயகர் கோவிலில் கலசம் பிரதிஷ்டை
ADDED :5020 days ago
கடலூர் : கூத்தப்பாக்கம் விநாயகர் கோவிலில் புதிய கலசம் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை நடந்தது. கடலூர், கூத்தப்பாக்கம் எல்.ஐ.சி., நகரில் உள்ள சர்வ சக்தி விநாயகர் கோவிலின் கோபுர கலசம், "தானே புயலில் சேதமடைந்தது. அதனையொட்டி குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் புதிய கலசம் பொருத்தும் விழா நேற்று நடந்தது. அதனையாட்டி நேற்று காலை 7.30 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. புதிய கலசத்தை கோபுரத்தில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து விநாயகருக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.