கந்தசஷ்டி விரத நிறைவு
ADDED :2633 days ago
கந்தசஷ்டியின் நிறைவு நாளன்று காலை முதல் மாலை சூரசம்ஹாரம் முடியும் வரை ’ஓம் முருகா’ என்னும் மந்திரத்தை மனதுக்குள் உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். கந்த சஷ்டிக்கவசம், கந்தகுரு கவசம், சண்முக கவசம் போன்ற முருகன் பாடல்களைப் படிக்கலாம். காலை, மதியம் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் சூரசம்ஹாரம் தரிசித்தபின் நீராடி உணவு சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். மறுநாள் முருகன் கோயில்களில் நடக்கும் ’பாவாடை நைவேத்யம்’ என்னும் உணவு படைக்கும் நிகழ்ச்சியில் பிரசாதம் வாங்கி சாப்பிடலாம்.