குளத்தூர் காமாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
சூலூர்:சூலூர் அடுத்த குளத்தூரில் உள்ள ஸ்ரீ சக்தி காமாட்சியம்மன் கோவில் பழமையானது. இங்கு, விநாயகர், முருகன், ஏகாம்பரேஸ்வரர், ஞான பைரவர், நவகிரகஹங்களுக்கு
தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டு, திருப்பணிகள் நடந்தன.
கடந்த, 9ம் தேதி மாலை, விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாரி மற்றும் புனித தீர்த்தங்கள் எடுத்து வரப்பட்டன. தொடர்ந்து, விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.
முதல் கால ஹோமம் மற்றும் தீபாராதனை நடந்தது. 10ம் தேதி காலை, இரண்டாம் கால ஹோமம் நிறைவுற்று, விமான கலசம் நிறுவப்பட்டது. பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. இரவு காமாட்சியம்மனுக்கு மருந்திடப்பட்டது.
நேற்று (நவம்., 11ல்) காலை, 5:00 மணிக்கு காப்பு அணிவித்தல், நான்காம் கால ஹோமம் நடந்தது. காலை, 8:00 மணிக்கு, பரிவார தெய்வங்கள் மற்றும் சக்தி காமாட்சியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.