வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார விழா
ADDED :2555 days ago
வில்லியனூர்:வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் இன்று சூரசம்ஹார விழா நடக்கிறது.வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார விழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 11ம் தேதி யானைமுக சூரன், நேற்று 12 ல் சிங்கமுக சூரன் வதம் நிகழ்ச்சி நடந்தது. இன்று (நவம் 13ல்), சூரசம்ஹார விழா நடக்கிறது.
காலை சிறப்பு அபிஷேகம், இரவு 7:00 மணியளவில் பட்டு அணிவித்தல், சக்திவேல் வாங்குதல், சுந்தரமூர்த்தி விநாயகர் அருள் பெறுதல், கம்பம் ஏறுதல்ஆகிய நிகழ்வுகளுக்கு பிறகு, சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. நாளை (14ம் தேதி) மாலை 4:30 மணிக்கு மேல் 6:00 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது.