கந்தசஷ்டி: கொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை
ADDED :2850 days ago
விருதாச்சலம்: மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் கந்தசஷ்டியை யொட்டி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
விருதாச்சலம், மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவை முன்னிட்டு, உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மூலவர் கொளஞ்சியப்பர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.