பிள்ளைகாளியம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
ADDED :3 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டணம் பிள்ளைகாளியம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது. அக்.,31 ல் சந்தை கடை விநாயகர் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து யாக பூஜை துவங்கியது. நேற்று காலை வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. பிள்ளைகாளியம்மனுக்கு பல்வேறு விதமான அபிஷேக ஆராதனைகள் நடந்து. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.