உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலூரில் சரண கோஷ ஊர்வலம்

கூடலூரில் சரண கோஷ ஊர்வலம்

கூடலூர்:சபரிமலை பாரம்பரியத்தை பாதுகாக்க கோரி, கூடலூரில் ஐயப்ப பக்தர்கள் சார்பில், சரணகோஷ ஊர்வலம் நடந்தது.கூடலூர், அகில பாரத ஐயப்பன் சேவா சங்கம் சார்பில், சபரி மலை பாரம்பரியத்தை பாதுகாக்க கோரி, கூடலூர் நகராட்சி அலுவலகத்திலிருந்து சரணகோஷ ஊர்வலம் துவங்கியது. மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார். ஊர்வலத்தை வாசுதேவன் துவக்கி வைத்தார். பக்தர்கள், சபரிமலை பாரம்பரியத்தை பாதுகாக்க கோரி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !