கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில் மறுபூஜை விழா
கன்னிவாடி:கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில் மறுபூஜையை முன்னிட்டு, மகா அன்னதானம் நடந்தது.
கன்னிவாடி அருகே கசவனம்பட்டியில் பிரசித்தி பெற்ற மவுனகுரு சுவாமி கோயிலில், குரு பூஜை நவ. 11ல் நடந்தது. முன்னதாக, சிவனூரணி, திருமலைக்கேணி, திருமூர்த்தி, சுருளி, சதுரகிரி, சோமலிங்கபுரம், காசி, ராமேஸ்வரம், பம்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து, புனித நீர் எடுத்து வந்தனர். கிராம விளையாடலுடன் தீர்த்தாபிேஷகம், மகா யாகம், ஆயிரத்து 8 படி பாலாபிஷேகம் நடந்தது. மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான, மறுபூஜை விழா நேற்று (நவம்., 13ல்)நடந்தது.
தேவார, திருவாசக பாராயணத்துடன், மூலவர், உற்சவர், நந்திக்கு 30 வகை அபிேஷகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர், நடந்த மகா அன்னதானத்தில், ஏராளமானோர் பங்கேற் றனர். மவுனகுரு சுவாமிகள் அறக்கட்டளை தலைவர் குமரேசன், செயலாளர் ஆனந்தன், பொருளாளர் ஞானபாண்டியன், ஏற்பாடுகளை செய்திருந் தனர்.